பழமையான அல் ஹக்கிம் மசூதிக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி..!
எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த அல் ஹக்கீம் மசூதிக்கு இன்று செல்கிறார்.
எகிப்தில் 11ஆம் நூற்றாண்டில் ஃபாத்திமிட் வம்சத்தினர் ஆட்சி செய்தபோது கட்டப்பட்டதே அல்-ஹக்கீம் மசூதி. இந்தியாவில் குடியேறிய போஹ்ரா சமூகத்தினர், ஃபத்திமிட் வம்சத்தினரிடமிருந்து உருவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1970ம் ஆண்டு முதல் மசூதியைப் புதுப்பித்த போஹ்ரா சமூகத்தினர் அதனை பராமரித்து வருவதாக எகிப்துக்கான இந்தியத் தூதர் அஜித் குப்தே தெரிவித்துள்ளார்.
Comments