''சீன ஆராய்ச்சி மையத்தில் கொரோனா உருவாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை..'' - அமெரிக்க உளவுத்துறை..!
சீனாவின் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வூஹான் ஆராய்ச்சி மையத்தில் பயோ வெப்பனாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும், இதனை உருவாக்கிய விஞ்ஞானிகளில் 3 பேருக்கு வைரஸ் பரவியதாகவும் தகவல்கள் முன்பு வெளியாகி இருந்தது.
இது தொடர்பான உண்மையை கண்டறிய அமெரிக்க நாடாளுமன்றம் வலியுறுத்தியதால் அந்நாட்டு உளவுத்துறை இதற்கான முயற்சியில் இறங்கியது.
விசாரணையில், சீன ஆராய்ச்சியகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரியவந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சீன ஆய்வகத்தில் விஞ்ஞானிகளுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், அவர்கள் வைரசை உருவாக்கினார்களா? இல்லையா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Comments