உலகின் மிகப் பழைமையான மொழி தமிழ் - பிரதமர் மோடி
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். வாஷிங்டனில் ரோனால்ட் ரீகன் கட்டடத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் பேசிய அவர், உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்மொழிதான் எனக் குறிப்பிட்டார். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்திய அரசு உதவும் என்றும் மோடி உறுதியளித்தார்.
கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் மூலமாக இந்தியா 100 மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் மோடி தெரிவித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த காலம் எனக் குறிப்பிட்ட பிரதமர், இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதை இன்று உலகமே மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments