மத்தியப் பிரதேசத்தில் வன நிலத்தை ஆக்கிரமித்ததாக தலித் மக்களின் வீடுகள் இடிப்பு..!
மத்தியப் பிரதேசத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சாகர் மாவட்டத்தில் உள்ள ராய்புரா என்ற இடத்தில் கடந்த புதன் கிழமை இரவு தலித்துகள் மற்றும் பிறரின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இதில் தலித் மக்களின் 6 வீடுகள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த நிலையில் வனநிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களின் வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன.
Comments