ரஷ்யா வீசிய 13 ஏவுகணைகளை தாக்கி அழித்தது உக்ரைன்

0 1355

தங்களின் ராணுவ விமான நிலையத்தை நோக்கி வீசப்பட்ட ரஷ்ய ஏவுகணைகளைத் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள கெம்லினிட்ஸ்கி என்ற இடத்தில் அந்நாட்டு ராணுவ விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தைக் குறிவைத்து TU-95 குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் குரூஸ் வகை ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாகக் கூறப்படுகிறது.

இதில் காஸ்பியன் கடலில் இருந்து ஏவப்பட்ட 13 ஏவுகணைகளையும் தாக்கி அழித்து விட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் உளவு ட்ரோன் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments