பாட்னாவில் 4 மணி நேரம் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்..
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் 17 கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதலமைச்சர் அதில் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் 11 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ளதாக நிதிஷ் குமார் குறிப்பிட்டார்.
அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டதை மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஜூலை இரண்டாவது வாரம் சிம்லாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டம் குறித்த நிலைப்பாட்டை காங்கிரஸ் அறிவிக்காததால் தாங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூட்டத்துக்குப் பின் வெளியிட்ட ட்வீட்டில் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
Comments