பாகிஸ்தானிலிருந்து மெக்காவிற்கு நடந்தே சென்ற கல்லூரி மாணவன்.... ஈரான், அமீரகம், சவுதி அரேபியா வழியாக 4,000 கி.மீ நடைபயணம்....!
பாகிஸ்தான் நாட்டு கல்லூரி மாணவர் ஒருவர் நான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவு மெக்காவிற்கு நடந்தே சென்று ஹஜ் யாத்திரை மேற்கொண்டார்.
25 வயதான உஸ்மான் அர்ஷத், கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் ஒகாரா நகரிலிருந்து நடை பயணத்தை தொடங்கினார்.
ஈரான், ஈராக், குவைத் வழியாக சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் ஈராக் விசா கிடைக்காததால் ஈரானிலிருந்து படகு மூலம் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கிருந்து நடைபயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார்.
கடும் வெயிலில், போதிய தங்கும் வசதிகளற்ற பாலைவன சாலைகள் வழியாக பல மைல் தூரம் நடந்து சென்றபோதும் வழியில் சந்தித்தவர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தியதால் இலக்கை எட்ட முடிந்ததாக உஸ்மான் தெரிவித்துள்ளார்.
Comments