மில்லி உள்ள போனா.. கில்லி வெள்ள வருவான்டா.. குடிக்க சொல்கிறாரா விஜய் ? பாடலாசிரியர் பார்த்த வேலை

0 12033

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் பாடல் வெளியான 12 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல் வரிகள் முழுவதும் மதுவுக்கும் , புகைப்பழக்கத்துக்கும் ரசிகர்களை தூண்டுவது போல இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் அம்பேத்காரை , பெரியாரை , காமராஜரை படியுங்கள் என்று கூறி தனது அரசியலுக்கான முதல் விதையை டிரெண்டிங் ஆக்கியவர் விஜய்..!

விஜய்யின் பிறந்த நாள் பரிசாக அவர்களது ரசிகர்களுக்கு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து யூடியூப்பில் வெளியானது விஜய் சொந்தக்குரலில் பாடி உள்ள, நான் ரெடி பாடல்.

இந்தப் பாடல் வெளியான 14 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளையும், 3 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வைகளையும் கடந்து ரசிகர்களை கொண்டாடச் செய்தது

திரையரங்குகளில் சிறப்புக்காட்சியாக நான் ரெடி பாடல் திரையிடப்பட்ட போது விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்

விஜய் ரசிகர்களின் உற்சாகம் ஒருபக்கம் கரைபுரண்டோடி கொண்டிருக்க, விஜய் வாயில் சிகரெட்டுடன் தோன்றிய ஒற்றை போஸ்டருக்கே அன்புமணி கண்டன குரல் எழுப்பிய நிலையில், பாடல் முழுவதும் சிகரெட் புகையும் , மதுக்கோப்பையும் கலந்து கட்டி ஓடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது

குறிப்பாக, குடிக்க பாட்டில் பத்தாது அண்டாவ கொண்டாங்க.... என்றும் புகையிலையை பத்த வச்சி புகையவிட்டா பவர் கிக்கு... என்பது போன்ற வரிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்

அதே போல மில்லி உள்ளே போனா போதும் கில்லி வெள்ள வருவாண்டா.. என்றும் மன்சூரலிகான் உள்ளிட்ட அனைவரும் கையில் மதுக்கோப்பையுடன் தோன்றும் காட்சிகளும் சுட்டிக்காட்டப்படுகின்றது

ரசிகர்களும், ரசிகைகளும் மூத்த அண்ணனாக கருதும் நடிகர் விஜய்யின் படங்களில் காட்சிகளும் ,பாடல்வரிகளும் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. அதே நேரத்தில் பாடலாசிரியர் எழுதிய வரிகளை விஜய் பாடியுள்ளார் என்றும் படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் விஜய் ரசிகர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments