நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி பாதியிலே ரத்து..!

0 3423

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி பாதியிலே ரத்து செய்யப்பட்டது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வடபழனியில் உள்ள பிரபல மாலில் தனியார் யூடியூப் ஒன்று சார்பாக இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாடகர்களான ஷியாம் விஷால், ஸ்ரீநிஷா மற்றும் டிஜே பிளாக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சியில் 500 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் அதிகமாக கூடியதால் மால் நிர்வாகம் சார்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் நிகழ்ச்சி பாதியிலே ரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments