அஸ்ஸாமில் கனமழை, பெரு வெள்ளத்தால் 5 லட்சம் பேர் பாதிப்பு

0 1456

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 22 மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 3 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாநிலத்திலேயே அதிக அளவாக பஜாலியில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments