இந்திய விமானப்படை ஜெட் விமானங்களுக்கு அமெரிக்க என்ஜின் - கையெழுத்தானது முக்கிய ஒப்பந்தம்

0 2188
இந்திய விமானப்படை ஜெட் விமானங்களுக்கு அமெரிக்க என்ஜின் - கையெழுத்தானது முக்கிய ஒப்பந்தம்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்திய விமானப்படையின் ஜெட் போர் விமானங்களுக்கான என்ஜின்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து இந்தியவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ்-Mk2 போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F414 என்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பில் நன்மைகளை வழங்கும் என்று ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் லாரன்ஸ் கல்ப் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவன என்ஜின்கள் மிகவும் தரம் வாய்ந்தவை என்றும், பிறநாட்டு தயாரிப்புகளுடன் ஒப்பிட முடியாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments