தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

0 3318
தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் விஜய் 49-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 49 பேருக்கு உணவு மற்றும் அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு விஜய் ரசிகர்கள் பெட்ரோல் வழங்கினர்.

கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் விஜய் பிறந்த நாளன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பொதுமக்களுக்கு காலை உணவும் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 18 ஆலயங்களில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கியும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கியும் கொண்டாடினர்.

திருவள்ளூரில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் மற்றும் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி ரசிகர்கள் கொண்டாடினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இலவச மினிபேருந்து சேவை வழங்கி ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் விஜய் ரசிகர்களான 20 ஆட்டோ ஓட்டுநர்கள் இலவச பயணிகள் சேவை வழங்கி விஜயின் பிறந்த நாளை கொண்டாடினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments