திருவாரூரில் மாமுல் தராததால் ஓட்டல் சூறை: 2 பேர் கைது
மன்னார்குடியில் மாமூல் தராததால் ஓட்டலை சூறையாடிய வழக்கில் 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
வ.உ.சி தெருவில் வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் சிங்கப்பூர் பரோட்டா என்ற கடையில் 19-ஆம் தேதியன்று 3 பேர் கும்பல் அரிவாளால் தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்தியதுடன், ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரையும் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படும் 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீஸார் தலைமறைவான விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.
Comments