மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
மியான்மரின் யாங்கூன் பகுதியில் நேற்றிரவு 4.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, நள்ளிரவு 2:53 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5.43 மணியளவில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவான நிலநடுக்கம், பூமிக்கடியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் மக்கள் இரவு முழுவதும் உறக்கமின்றி விழித்தபடி இருந்தனர். ஏராளமானோர் அச்சத்தால் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
Comments