அசாமில் கொட்டித்தீர்க்கும் கனமழை : 108 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
அசாம் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அசாம் மற்றும் அண்டை நாடான பூட்டானில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால், பக்லாடியா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஆற்றை சுற்றியுள்ள 108 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் உயரமான இடங்களில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தஞ்சமடைந்துள்ளனர்.
அசாம் வெள்ளத்தில் சுமார் 45 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை உள்ளிட்டவை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
Comments