காஷ்மீர் முதல் குமரி வரை.. எட்டுத்திக்கும் களைகட்டியது 9-வது சர்வதேச யோகா தினம்

0 1958

சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தலைவர்கள், ராணுவ வீரர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா செய்தார் நாட்டின் முதல் குடிமகளான திரவுபதி முர்மு. மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள யோகா தின வாழ்த்து செய்தியில், உடலுக்கும் மனதுக்கும் இடையே யோகா ஒரு சமநிலையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ரஜ்நாத் சிங், கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகா செய்தார்.

திருவனந்தபுரத்தில் ராணுவ வீரர்கள் தேசிய கொடியின் மூவர்ணத்தில் நீச்சல் உடை அணிந்து தண்ணீரில் இறங்கி யோகா மேற்கொண்டனர்.

சிக்கிமில் பனிபடர்ந்த மலைப்பகுதியில் கடும் குளிருக்கு இடையே ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.

மறுபுறம், ராஜஸ்தானில் பாலைவனத்திலும் ராணுவ வீரர்களின் யோகா நிகழ்ச்சி நடந்தது.

 இந்தோ - திபேத் எல்லையில் மோப்ப நாய் பிரிவு சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

மும்பையில் ஓடும் ரயிலில் யோகா பயணிகள் யோகா செய்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதே போல குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் மற்றும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், யோகா குரு ராம்தேவ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் யோகா செய்தனர்.

 பாலிவுட் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, மலைக்கா அரோரா,  ரகுல் பிரீத் உள்ளிட்டோர் யோகா செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments