சீன அதிபர் ஷி ஜின்பிங் ஓர் சர்வாதிகாரி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டம்

0 1960

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனா சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இருதரப்பும் சில குறிப்பிட்ட விஷயங்களில் முன்னேற்றத்தையும், ஒப்புதலையும் எட்டியிருப்பதாக ஜின்பிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ஜோ பைடன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் பறந்த சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதால் சீன அதிபர் ஜின்பிங் வருத்தமடைந்ததாக கூறியுள்ளார்.

பலூனில் உளவு உபகரணங்கள் இருந்தது ஜின்பிங் போன்ற சர்வாதிகாரிகளுக்கு தெரியாதது பெரும் அவமானம் என்றும், அதோடு அந்த பலூன் எங்குச்செல்ல வேண்டுமோ அங்கு செல்லாமல் திசை மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பைடனின் இந்த கருத்து சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments