தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை உடைக்கும் பணி துவக்கம்
உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்ஸம் கழிவுகளை உடைக்கும் பணி துவங்கியது.
தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் 9 பேர் கொண்ட கண்காணிப்பு மேலாண்மை குழுவினர் கழிவுகளை அகற்றுவதற்கான ஆய்வு பணிகளை கடந்த பத்து தினங்களாக மேற்கொண்டு வந்தனர். அவற்றின் அடிப்படையில் ஜிப்ஸம் கழிவுகளை அகற்றுவதற்காக உடைத்தெடுக்கும் பணி துவங்கியது.
பின்னர் செய்தியாளரை சந்தித்த சார் ஆட்சியர், உடைக்கப்படும் ஜிப்சம் கழிவுகள் வெள்ளிக்கிழமை முதல் அகற்றப்பட்டு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
Comments