"மெட்ரோ, ரயில்வே மேம்பாலப் பணிகளால் சுரங்கப்பாதைகளில் தண்ணீர்" - அமைச்சர் கே.என்.நேரு
மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாகவே கத்திபாரா, கணேசபுரம் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் 4 மணி நேரங்களில் அகற்றப்பட்டதாகக் கூறினார்.
Comments