கனடா விமானப்படை ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து.. 2 வீரர்கள் உயிரிழப்பு

0 1754

கனடாவில் விமானப்படைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

செவ்வாய்கிழமை அதிகாலை பெட்டாவாவில் உள்ள இராணுவ தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த சி.எச்.147 சினூக் ரக ஹெலிகாப்டர், ஒட்டாவா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டரில் பயணித்த 4 வீரர்களில் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரை ஆற்றில் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாயமான 2 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments