விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் பெற முகமே போதும்.. விமானநிலைய நெரிசல் நேர விரயத்தைத் தவிர்க்க புதிய தொழில்நுட்பம்..
இந்தியாவில் விமானநிலையங்களில் போர்டிங் பாஸாக பயணியின் முகத்தை அடையாளப்படுத்தும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து நெரிசல் ஏற்பட்ட போது நேரில் சென்று பார்வையிட்ட விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா விமான நிலைய சேவைகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக THALES என்ற விமானப்போக்குவரத்து,விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இந்திய விமான நிலைய அதிகாரிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
விமான நிலையத்தில் நுழையும் பயணி யாரையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லாமல் பயோமெட்ரிக் முறையில் முகத்தைக் காட்டியே போர்டிங் பாஸ் பெற முடியும். இதன் மூலம் விமானத்துக்கான போர்டிங் நேரம்30 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments