பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரானதல்ல.. வெள்ளைமாளிகை விளக்கம்
பிரதமர் மோடியின் வருகை சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான செயல்பாடு அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அமெரிக்கா உற்சாகமாக வரவேற்றுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர், ஜான் கிர்பி, உலகளவில் இந்தியா மிகவும் வலிமை வாய்ந்த நாடாக வளர்வதை அமெரிக்கா ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.
இந்தோ பசிபிக்கில் சுதந்திரமான வெளிப்படையான வர்த்தகத்தை எட்ட இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் எனறும் கிர்பி தெரிவித்தார்.
Comments