சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும்- மத்திய அமைச்சர்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அடுத்த மூன்று மாதங்களுக்கு சீராக இருந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையலாம் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய தனது 80 முதல் 85 சதவீத கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருவதாக தெரிவித்தார். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலமாக இழப்புகளை சந்தித்து வந்தன.
தற்போது அவற்றின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால் சாத்தியம்தான் என்றார்.
Comments