பாக்., தீவிரவாதி சாஜித் மீருக்கு தடை விதிக்க இந்தியா பரிந்துரை.. சீனா ஆட்சேபம்
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சாஜித் மீருக்கு சர்வதேச அளவிலான தடையை விதிக்க ஐநாவில் இந்தியா செய்த பரிந்துரையை சீனா தடுத்து நிறுத்தியது.
மும்பைத் தாக்குதல் வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான சாஜித் மீருக்குத் தடை விதிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐநா.சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. தடை செய்யப்பட்டால் அவருடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
பயணங்களுக்குத் தடை விதிக்கப்படும் ஆயுதங்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும். ஆனால் இத்தீர்மானத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சாஜித் மீருக்கு 15 ஆண்டு சிறைதண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. சாஜித் மீர் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
Comments