கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10 பேரை அழைத்துச் சென்று ஆந்திர போலீசார் தாக்குதல்..? மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்ததாக புகார்
திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 10 பேரை ஆந்திர போலீசார் அழைத்துச் சென்று மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் குறவர் இனத்தவர்கள் 4 பெண்கள், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை கடந்த 11-ம் தேதி இரவு ஆந்திர போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இது பற்றி அந்த 10 பேரின் குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தமிழக போலீசார் விசாரித்த போது, 10 பேரும் சித்தூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் கிருஷ்ணகிரிக்கு மீட்டு வரப்பட்டனர். சித்தூர் காவல் நிலைய போலீசார் தங்களது உடலில் மிளகாய் பொடி தூவி, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட டி.எஸ்.பி. சம்பந்தப்பட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில் சித்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இருவர் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments