டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 சுற்றுலா பயணிகளுடன் சென்ற 21 அடி நீள நீர்மூழ்கி கப்பல் மாயம்...!
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலைத் தேடும் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளன.
பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் நாட்டு பெருங்கோடீஸ்வரர் ஷஸாதா தாவூத் (Shahzada Dawood ), அவரது மகன் சுலைமான் உள்பட 5 பேர், டைட்டன் என்ற 21 அடி நீள சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் டைட்டானிக் கப்பல் நோக்கி சாகச பயணத்தை கடந்த ஞாயிறன்று தொடங்கினர்.
பத்தாயிரத்து 400 கிலோ எடையிலான அந்த நீர்மூழ்கி கப்பல், கடலுக்குள் இறங்கிய இரண்டே மணி நேரத்தில் கட்டுப்பாடு அறை உடனான தொடர்பை இழந்தது. 96 மணி நேரத்திற்கு மட்டுமே அந்த நீர்மூழ்கியில் ஆக்சிஜன் சப்ளை உள்ளதால் அமெரிக்க மற்றும் கனடா நாட்டு கடலோர காவல்படையினர் கப்பல்கள், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளன.
Comments