உலகளவில் 300-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடைய 20 மருந்துகள் பட்டியல்.. இந்தியாவிலிருந்து 7 தயாரிப்புகள் இடம்பிடித்துள்ளதாக தகவல்
உலகளவில் 300-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடைய 20 மருந்துகள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 7 தயாரிப்புகள் இடம்பிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தான், காம்பியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட இறப்புகளுடன் தொடர்புபடுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சில இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
தற்போது எச்சரிக்கப்பட்டுள்ள 7 இந்திய தயாரிப்புகளில் இருமல் மருந்து, வைட்டமின் டானிக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, நொய்டாவின் மரியான் பயோடெக், ஹரியானாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ், சென்னையின் குளோபல் பார்மா, பஞ்சாபின் க்யூபி பார்மகெம் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments