வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு... இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை...!

0 2086

தெலுங்கானாவில், வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர், தனது இரட்டைக் குழந்தைகளை 8வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

செகந்திராபாத்தில் உள்ள பன்சிலால்பேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ் - செளந்தர்யா தம்பதி. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், ஒன்றரை வயதில் நித்யா - நிதர்ஸ் என்ற இரட்டை குழந்தைகள் இருந்தன.

முடி திருத்தும் தொழில் செய்து வரும் கணேஷ் கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி செளந்தர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்த செளந்தர்யா, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தாய் வீடு இருக்கும் 8 அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்று, குழந்தைகளை கீழே வீசி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமையால் செளந்தர்யா விபரீத முடிவு எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவரது கணவர் கணேஷை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments