கத்தார் வீரரால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான நியூசிலாந்து வீரர்... இரண்டாம் பாதி ஆட்டத்தை புறக்கணித்த நியூசிலாந்து வீரர்கள்

0 4363
கத்தார் வீரரால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான நியூசிலாந்து வீரர்... இரண்டாம் பாதி ஆட்டத்தை புறக்கணித்த நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து அணியின் சக வீரர்கள் கத்தாருக்கு எதிரான கால்பந்து போட்டியை பாதியில் புறக்கணித்தனர்.

நியூஸிலாந்து மற்றும் கத்தார் அணிகள் இடையிலான நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஆஸ்திரியாவில் நடைபெற்றது. அதில் சமோவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர் மைக்கேல் போக்சாலை, கத்தார் வீரர் ஒருவர் இனரீதியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுவரிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தை நியூசிலாந்து வீரர்கள் புறக்கணித்தனர். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments