ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரையை சிறப்பிக்கும் வகையில் மணல் சிற்பம்
ஒடிசாவில் பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரையை சிறப்பிக்கும் வகையில் பூரி கடற்கரையில் மணற் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார்.
3 தேர்களையும்,தேங்காய் போன்ற தோற்றத்திற்குள் கடவுளர்கள் ஜெகன்நாதர், பாலபத்ரா, தேவி சுபத்ரா ஆகியோரின் உருவங்களையும் மணல் சிற்பமாக வடித்துள்ளார். மணல் சிற்பத்திற்கு இடையே 250 தேங்காய்கள் வைக்கப்பட்டுள்ளன.
ரத யாத்திரை மணல் சிற்பத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
Comments