அடுத்தடுத்து 3 சீன உணவகங்களுக்குள் புகுந்து வாடிக்கையாளர்களை கோடாரியால் தாக்கிய இளைஞன் கைது

0 1650
அடுத்தடுத்து 3 சீன உணவகங்களுக்குள் புகுந்து வாடிக்கையாளர்களை கோடாரியால் தாக்கிய இளைஞன் கைது

நியூசிலாந்தில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்களுக்குள் புகுந்து வாடிக்கையாளர்களை கோடாரியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், 3 சீன உணவகங்கள் அருகருகே அமைந்துள்ளன. நேற்றிரவு 9 மணியளவில், அதிக வாடிக்கையாளர்கள் வரும் நேரம் பார்ந்து அங்கு வந்த 24 வயது இளைஞன் அங்கிருந்தவர்களை சரமாரியாக கோடாரியால் தாக்கினான்.

இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் அவனை உடனடியாக கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments