ரத்த தானம் - வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதன் எதிரொலி... அரசு மருத்துவ மனையில் ரத்தம் தர குவிந்த தன்னார்வலர்கள்

0 3095
ரத்த தானம் - வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதன் எதிரொலி... அரசு மருத்துவ மனையில் ரத்தம் தர குவிந்த தன்னார்வலர்கள்

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட தகவலால் கடலூர் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்வதற்காக தன்னார்வலர்கள் குவிந்தனர்.

பண்ருட்டி அருகே நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 90 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள காரணத்தினால் அவர்கள் ஆறு பேரும் புதுவை மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஏராளமானோர் ரத்தத்தை அதிக அளவில் இழந்துள்ளதால் அவர்களுக்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாக கடலூர் மாவட்ட முழுவதும் உள்ள whatsappகுழுக்கள் மூலம் செய்திகள் அனுப்பப் பட்டது.

இதனை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான தன்னார்வலர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து ரத்த தானம் செய்தனர்.இதேபோல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் நேரில் வந்து காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments