பொது சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
பொது சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், அதில் ஏன் சர்ச்சை எழுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை அரசியலாக்குவதாகவும் அவர் சாடினார்.பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் கருத்துக் கேட்டுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் கோவாவில் பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
Comments