ரிஷி சுனக் தாயார் சமைத்த 'பர்பி'யை ருசித்து சாப்பிட்ட ஜெலன்ஸ்கி..!

0 2553

தனது தாயார் சமைத்த பர்பியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ருசித்து சாப்பிட்ட காணொலியை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக்கின் தாயார், கடந்த பிப்ரவரி மாதம் மகன் ரிஷி சுனக்கை சந்திக்க சென்றபோது பாலிலிருந்து தயாரிக்கப்படும் பர்பி என்ற இனிப்பு வகையை சமைத்து, எடுத்து சென்றுள்ளார்.

அடுத்த ஓரிரு தினங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியை தனது இல்லத்தில் வைத்து சந்தித்தபோது, அவர் பசியுடன் இருப்பதை கவனித்த ரிஷி சுனக், தாயார் சமைத்து கொடுத்த பர்பியை ஜெலன்ஸ்கிக்கு வழங்கினார்.

இந்த வாரம், லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் காணொலி வாயிலாக ஜெலன்ஸ்கி உரையாற்ற உள்ள நிலையில் அந்த காணொலியை ரிஷி சுனக் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments