அரசு போக்குவரத்துப் பணிமனையில் பதுங்கியிருந்த 23 பாம்புகள்.. லாவகமாகப் பிடித்த பாம்பாட்டிகள்..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து நாகம், கட்டுவிரியன் உட்பட 23 பாம்புகளை பாம்பாட்டிகள் பிடித்துச் சென்றனர்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பணிமனையில் டயர்களை புதுப்பிக்கும் பிரிவும் இயங்கி வருகிறது.
அங்கு நூற்றுக்கணக்கான பழைய டயர்கள் பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பின்றி கிடக்கும் அந்தப் பகுதியில் விஷப்பாம்புகளின் நடமாட்டம் காணப்பட்டதாக தெரிகிறது.
பணிமனையை சுற்றியுள்ள மக்கள் இதுகுறித்து புகார்களை தெரிவித்து வந்த நிலையில், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாம்பாட்டிகள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள், டயர்களுக்கிடையே சென்று மகுடியை ஊதியபோது, பாம்புகள் உள்ளிருந்து ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. அவற்றை லாவகமாகப் பிடித்த பாம்பாட்டிகள் சணல் சாக்குகளில் அடைத்து எடுத்துச் சென்றனர்.
Comments