நடுவானில் பயங்கரமாக குலுங்கிய 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம்.. நிலைதடுமாறி விழுந்த பணிப்பெண்களுக்கு காணுக்காலில் எலும்பு முறிவு..!

0 2502

சிங்கப்பூரிலிருந்து லண்டன் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியபோது நிலைதடுமாறி விழுந்த பணிப்பெண்கள் இருவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் வங்க கடல் மீது 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது மோசமான வானிலை காரணமாக பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது. அதில் விமான பணிப்பெண்கள் 5 பேர் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பப்பட்டது.

கீழே விழுந்து காயமடைந்த இரு பணிப்பெண்களுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் விமானம் குலுங்கும் நிகழ்வுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments