தேவாலயத்துக்கு வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் போக்சோவில் கைது...!

0 10413

தேவாலயத்திற்கு வந்த பெண்ணை 14 வயதில் இருந்தே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில், வினோத் ஜோஸ்வா என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தேவாலாயத்திற்கு பாட்டு கிளாஸுக்கு வந்த பெண்ணை, 14 வயது முதலே, மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த பெண் திருமணமாகி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், வினோத் ஜோஸ்வா, அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

விசாரணையின் போது, கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வினோத் ஜோஸ்வா ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments