போருக்கு மத்தியில், உக்ரைனில் நடப்பாண்டுக்கான உணவு தானியங்கள் அறுவடை தொடக்கம்..!
போருக்கு மத்தியில், உக்ரைனில் நடப்பாண்டுக்கான உணவு தானியங்கள் அறுவடை தொடங்கியுள்ளது.
உலகளவில் உணவு தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் உக்ரைனில் போருக்கு மத்தியிலும் வேளாண் பணிகள் தொடர்ந்தன.
சுமார் 13 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் தானியங்கள் பயிரிடப்பட்ட நிலையில், தற்போது ஒடேசா பிராந்தியத்தில் உள்ள விவசாயிகள் கோதுமை, பார்லி, பட்டாணி, சோளம் போன்ற தானியங்களை அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்ய படையெடுப்பின் காரணமாக, இந்தாண்டு உணவு தானிய ஏற்றுமதி 53 மில்லியன் டன்னில் இருந்து, 45 மில்லியன் டன்னாக குறையும் என கருதப்படுகிறது.
Comments