தமிழ்நாட்டில் புதன் கிழமை வரை மழை தொடரக் கூடும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் புதன் கிழமை வரை மழை தொடரக் கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டி அளித்த அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னை மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 சென்டி மீட்டர் மழைப் பதிவானதாகவும், ஜூன் மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்வது 73 ஆண்டுகளில் இதுவே 2-வது அதிகபட்ச அளவு என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments