கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 20,000 அடி உயரத்தில் ஆளில்லா விமானத்தை இயக்கி வெற்றிகரமாக சோதனை
தபஸ் என்ற ஆளில்லா விமானத்தை தொலைதூரத்தில் இருந்து இயக்கி கடற்படையும், டி.ஆர்.டி.ஓ. அமைப்பும் இணைந்து வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.
இது குறித்து தெரிவித்த டி.ஆர்.டி.ஓ., ஆளில்லா விமானத்தின் கட்டுப்பாட்டு திறன் மற்றும் கட்டளை பரிமாற்றம் தொடர்பாக முழு அளவில் சோதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில், மூன்றரை மணி நேரம் அந்த ஆளில்லா விமானம் இயக்கப்பட்டதாகவும், அதில் 40 நிமிடங்கள் ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பலில் இருந்து இயக்கி சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளுக்கான உளவு, கண்காணிப்பு பணிகளை தபஸ் ஆளில்லா விமானம் மேற்கொள்ளும் என்றும் அதிகபட்சமாக 350 கிலோ எடையை தாங்கி செல்லும் திறன்கொண்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments