கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் தளர்வுகளை அறிவித்தது அமெரிக்கா
கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு, ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின்படி, கடும் உடல்நல பாதிப்பு, உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை அளித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும்.
பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Comments