லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் குத்திக்கொலை - கேரள இளைஞர் கைது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான இளைஞர், இங்கிலாந்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் சவுத்ஆம்டன்வெ பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கத்திக்குத்து காயங்களுடன் அரவிந்த் மீட்கப்பட்டார். அவருடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சலீம் என்பவரே அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையாளி சலீமை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் இங்கிலாந்து குடியுரிமைபெற்ற இந்தியரான கிரேஷ் ஒ மெலி குமார் என்ற இளைஞரும், ஹைதராபாத்தை சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண்ணும் கொலை செய்யப்பட்டனர்.
Comments