தலைநகரில் அதிகாலை 4 மணியளவில் நேர்ந்த பயங்கரம்.. அக்காள், தங்கையை சுட்டுக்கொன்ற 15 பேர் கொண்ட கும்பல்

0 3904
தலைநகரில் அதிகாலை 4 மணியளவில் நேர்ந்த பயங்கரம்.. அக்காள், தங்கையை சுட்டுக்கொன்ற 15 பேர் கொண்ட கும்பல்

டெல்லியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 15 பேர் கும்பலால் சகோதரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதிகாலை 4 மணியளவில், ஆர்.கே. புரத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டிய கும்பல், யாரும் வெளியே வராததால் செங்கற்களை எடுத்து கதவு மீது வீசி எறிந்தனர். அப்போது வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் லலித்தையும், அவரது இரு சகோதரிகளையும் நோக்கி அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது.

இதில் மார்பிலும், வயிற்றிலும் காயமடைந்த லலித்தின் இரு சகோதரிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். லலித் நூலிழையில் உயிர் தப்பினார். 10,000 ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தேவ் என்பவருடன் முன்விரோதம் இருந்ததாக லலித் அளித்த தகவலின் பேரில் தேவையும், அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments