யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும் : பிரதமர் மோடி
யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த வாரம் அமெரிக்கா செல்வதால் அதற்கு முன்பாக மக்களிடம் பேச விரும்பியதாக கூறினார். உலக யோகா தினத்தன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். எமர்ஜென்சி அமலுக்கு வந்த ஜூன் 25ஆம் தேதியை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், இந்திய வரலாற்றில் அது ஒரு இருண்ட காலம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதற்கான பணிகளில் இளைஞர்களும் பங்களிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
Comments