கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை

0 2724

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய தந்தையின் செயலால் இரண்டு குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தனர்.

மங்கப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலை ஒன்றை கவனக்குறைவாக கடந்ததில் விபத்து நிகழ்ந்தது.

சாலையை கடக்க முயன்றபோது வாகனங்கள் ஏதும் வருகிறதா என சற்று நேரம் கூட கவனிக்காமல் சுரேஷ் அப்படியே செல்ல, அவ்வழியாக வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த 4 பேரும் கீழே விழுந்தனர்.

மகனும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த கணவனும், மனைவியும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments