ரயில்வே டிவிசன் கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

0 1788

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி டிவிசன் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ரயில்கள் இயக்கப்படுவதையும் அவற்றின் பாதுகாப்பையும் நேரில் ஆய்வு செய்தார்.

ரயில்வே இயங்கும் முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் சுமார் 3 மணி நேரம்  அவர் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வேயில் கட்டுப்பாட்டு அறைகள் மிகவும் முக்கியமான செயலாற்றி வருவதாக குறிப்பிட்டார்.

ரயில்களின் இயக்கம், கட்டுப்பாட்டு அறை, ரயில் பாதைகள் பராமரிப்பு போன்றவற்றை தரம் உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments