போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார்: குடியரசுத் தலைவர்

0 3170

உயர்தொழில்நுட்ப போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

ஐதராபாத் அருகே இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதாபிமான உதவிகளையும் பேரிடர் நிவாரணப் பணிகளையும் விமானப்படை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்றார்.

சாதகமற்ற சூழலில் பறப்பது, தரையிறங்குவது ஆகியவை விமானப்படையின் உயர்திறன்களுக்கு சான்றாக விளங்குவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments