எஸ்.ஜி.சூர்யா அவதூறாக பதிவிடவில்லை.. அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு கௌரவம் தான் - அண்ணாமலை
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஒரே ஒரு வார்த்தை கூட அவதூறாக எதுவும் பதிவிடாத போதிலும் கைது செய்யப்பட்டு இருப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் பலி எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், இது பற்றி முதலமைச்சருக்கோ, தமிழக காவல்துறையினருக்கோ எந்த புரிதலும் இல்லை என குற்றம்சாட்டினார்.
எஸ்.ஜி.சூர்யா, இதேபோல் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்பார் என்றும், அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு கௌரவம் தான் எனவும் அண்ணாமலை கூறினார்.
Comments