சோஷியல் மீடியாவில் முக்கால்வாசி போலியான செய்திகள் பரவுகிறது..! விஜய் ஆதங்கப்பட்டது ஏன்..?

0 2391

மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசிய நடிகர் விஜய், வாக்கு செலுத்திய  நம் விரல்களால் நம் கண்கள் குத்தப்படுவதாக தெரிவித்ததோடு சமூக வலைதளங்களில் முக்கால்வாசி போலியான செய்திகள் வலம் வருவதாகவும் , இதில் சிலர் மறைமுகமான அஜண்டாவுடன் செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அசுரன் படத்தில் தனுஷ் பேசிய படிப்பு தொடர்பான டயலாக்குடன் விருது வழங்கும் விழாவில் பேச்சை துவங்கிய நடிகர் விஜய், மாணவர்கள் மேல் படிப்புக்காக வேறு ஊர்களுக்குசெல்லும் போது குணத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விஜய் சோசியல் மீடியாவில் முக்கால் வாசி போலியான செய்திகள் பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

முடிந்தவரை படியுங்கள் குறிப்பாக பாடங்களை தாண்டி தலைவர்களை பற்றி படியுங்கள் என்ற விஜய், நீங்கள் பின்பற்றும் சோசியல் மீடியா பக்கத்தை வைத்தே நீங்கள் யார் என்று சொல்லி விடலாம் என்றார்.

அண்மைகாலமாக விஜய்யின் குடும்ப விவகாரம் குறித்தும், தனிப்பட்ட வாழக்கை குறித்தும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட சில அவதூறு செய்திகளால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளான விஜய், தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக மேடையில் தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments