அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி அதான் அண்ணன் மூலையில குத்த வச்சி உட்கார்ந்து இருக்காரு..! மப்பில் வாகனம் ஓட்டியவருக்கு மாத்து

0 3119
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி அதான் அண்ணன் மூலையில குத்த வச்சி உட்கார்ந்து இருக்காரு..! மப்பில் வாகனம் ஓட்டியவருக்கு மாத்து

சென்னை மஞ்சம்பாக்கத்தில் மிதமிஞ்சிய போதையில் , சாலையில் சென்ற வாகனங்களை இடித்து தள்ளியபடி கார் ஓட்டிச்சென்ற அரசியல் பிரமுகரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த வாகன ஓட்டிகள், அவரை அடித்து மூலையில் அமர வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அளவுக்கதிகமான மது போதையில் காரை ஓட்டிச்சென்று இரு சக்கர வாகனங்களை இடித்து தள்ளியதால் வாகன ஓட்டிகள் கொடுத்த தர்ம அடியில் மூலையில் போய் உட்கார்ந்து குறுகுறுவென பார்க்கும் குடிகார கார் ஓட்டுனர் இவர் தான்..!

கொளத்தூர் அடுத்த விநாயக புரத்தில் இருந்து மாதவரம் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்த சிவப்பு நிற சுவிப்ட் கார் ஒன்று வழியில் சென்ற இரு சக்கர வாகனங்களை இடித்து தள்ளி விட்டு அதிவேகத்தில் சென்றது. இதில் சிலர் தவறி கீழே விழுந்த நிலையில் சுதாரித்துக் கொண்டவர்கள் அந்தகாரை விரட்டிச்சென்று மஞ்சம்பாக்கம் அருகே மடக்கிப் பிடித்தனர்.

போதையில் இருந்த அந்த நபரை காரை விட்டு வெளியே இழுத்த வாகன ஓட்டிகள் அடி வெளுத்ததால் ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் ஒரு மூலையில் சென்று அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்

அவரது காருக்குள் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்ததை கண்ட வாகன ஓட்டிகள், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு அழைத்துச்சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து விசாரித்தனர் . காரை ஓட்டி வந்தவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் சுரேஷ் என்பதும் உள்ளூர் அரசியல் பிரமுகரான அவர் எப்போதும் போதையில் வாகனம் ஓட்டிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், மிதமிஞ்சிய போதையால் வாகனங்களை இடித்து வாகன ஓட்டிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments